2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபட்டுள்ளது.

அதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சைக்கு ​தோற்றிய பரீட்சார்த்திகளில், 73.84 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சையில் 10,346 பரீட்சார்த்திகள் 9 A சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பெறுபேறுகளுக்கு அமைய கணித பாடத்தில் 66.82 வீதமானோர் சித்தி பெற்றுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை 4,989 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

7,17,246 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 189 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் இரண்டு இலட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.

Leave a Reply

Your email address will not be published.