P2P, நீதி கோரி தாயகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக நடந்த கவனயீர்ப்பு போராட்டம் சிட்னி.
P2P, நீதி கோரி தாயகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக நடந்த கவனயீர்ப்பு போராட்டம் சிட்னி.
தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி
சிட்னி பரமட்டா நகரில் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் இளையவர்கள் முதல் மூத்தவர்கள் என பெருமளவான தமிழ் மக்களோடு பல்லின சமூகமக்களும் என கலந்துகொண்டனர்.
எம்மவர்கள் விசியாக இருப்பதால் பலரால் கலந்து கொள்ளாவிட்டாலும் பல் சமூகம் சார்ந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்ந அடுத்த தலைமுறை சமுதாயம் என கவனயீர்ப்பு நிகழ்வினை கவர்ந்தார்கள்!
இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று 06-02-2021 சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வில் இளம்செயற்பாட்டாளர் ரேணுகா இன்பகுமார், நியுசவுத் மாநில அவை உறுப்பினர் Dr Hugh Mcdermott, அவுஸ்திரேலிய முன்னாள் மேலவை உறுப்பினர் லீ றியானன், நியுசவுத் வேல்ஸ் மாநில மேலவை உறுப்பினர் Anthony D’Adam, தமிழ்ச் செயற்பாட்டாளர் Durga Owen ஆகியோர் உரையாற்றினர்.
















