வல்வை செய்திகள்

பதின்மூன்றாம் நாளாக பசியிருந்து வாடும் ஓர் உன்னதம்.(13 ம் நாள்) அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக லாச்சப்பலில் ஒன்றுதிரண்ட தமிழர்கள்.

பதின்மூன்றாம் நாளாக பசியிருந்து வாடும் ஓர் உன்னதம்.(13 ம் நாள்)
அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக லாச்சப்பலில் ஒன்றுதிரண்ட தமிழர்கள்.

அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் ஒன்றுதிரண்டனர் தமிழர்கள்.
கொவிட்-19 சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன்
அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக ஒன்றுகூடி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
அம்பிகையின் 4 அம்சக் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி வீதியின் ஓரத்தில் நின்று ஒலிவாங்கி மூலம் ஆதரவுக்குரல்களை எழுப்பியிருந்தனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *