18-04-2009 சனிக்கிழமை அன்று வன்னியில் கொத்துக்குண்டு எறிகணை, துப்பாக்கிச் சூடு, குறிசூட்டுத் தாக்குதல்களில் 169 அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 234 அதிகமானவர்கள் படுகாயம் அடைந்த நாள் இன்று
2009 இனவாத அரசின் தமிழர் இன அழிப்புப் தொடர்….!
18-04-2009 சனிக்கிழமை அன்று வன்னியில் கொத்துக்குண்டு எறிகணை, துப்பாக்கிச் சூடு, குறிசூட்டுத் தாக்குதல்களில் 169 அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 234 அதிகமானவர்கள் படுகாயம் அடைந்த நாள் இன்று
யுத்தம் உச்சம் பெற்ற காலத்தில் ஒவ்வொரு நாளும் வகை தொகையாக அழிக்கப்பட்டது ஒன்று போதாத போர் இன அழிப்பிற்கான சாட்சியங்களாக இருக்கின்றதே!!


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் அன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 234 பேர் படுகாயமடைந்தார்கள்
‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிளில் உள்ள வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை, கனரக துப்பாக்கி மற்றும் குறிசூட்டுத் தாக்குதல்களை அன்று சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் இரவு வரை அகோரமாக நடத்தியிருந்தார்கள்.
‘பாதுகாப்பு வலய’ பகுதிகளான வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகள் மீது படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்தார்கள்.
இவ்வாறு 18-04-2009 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே 169 அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் 234 அதிகமான பேர் படுகாயமடைந்தார்கள்.
காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டுசெல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
கடும் சிரமத்தின் மத்தியில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை சிகிச்சை நிலையத்திலும் நட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்கள்
அநேகமானோர் படையினரின் கனரக துப்பாக்கி மற்றும் குறிசூட்டுத் தாக்குதல்களிலேயே படுகாயமடைந்தார்கள் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் உயிரிழந்தார்கள்.
இதேவேளையில் அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடத்தியிருந்தனர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது . அன்று மருத்துவமனையில் பலர் இறந்தார்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் பெயர், விபரம் கிடைக்கப்பெறவில்லை.
இதே நாள் வன்னியில் வேவ்வேறு இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் விபரங்கள் கிடைக்கவில்லை .
பதிவு – முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் நூலில் இருந்து.
படம்- த. வி.பு. ஊடகப் பிரிவு










