வல்வை செய்திகள்

வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகம் துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி

மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 over கொண்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரை இறுதியாட்டம் , மாலிசந்தி மைக்கல்விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகம் மோதியது .
முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை விளையாட்டுக்கழகம் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களை எடுத்தது. 46 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் புகுந்த கழுகுகள் விளையாட்டுக்கழகம் 3 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டி இறுதியாட்டத்திற்கு நுழைந்தது.
பெண்களுக்கான மென் பந்தாட்ட போட்டியில் வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது .

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *