அரசியல்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கூண்டுக்குள் பொங்கல்! 13.01.2022
பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் பொங்கல் என்ற தொனிப்பொருளில் பொங்கலொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் யாழ் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் இதனை ஒழுங்கு செய்திருந்தார்கள்.
இந்நிகழ்வில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் உள்ள உடைகளை அணிந்து கம்பிக்குள் இருந்தவாறு பொங்கல் நிகழ்வு நடத்தியுள்ளார்கள்.
இதில் முன்னைநாள் அரசியல் கைதிகள் மதத் தலைவர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.










