வல்வை செய்திகள்

வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழக மென்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் சம்பியனை நேதாஜி தனதாக்கி கொண்டது.

இளங்கதிர் விளையாட்டுக் கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திய மென்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது….

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நேதாஜி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்ற முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 69 ஓட்டங்களை பெற்றது.

70 வெற்றியிலக்கை நோக்கி ஆடிய நேதாஜி அணி 9.2 பந்துப்பரிமாற்ற முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி வெற்றிபெற்று சம்பியனாகியது.

*போட்டியின் ஆட்டநாயகனாக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த தர்சன் தெரிவுசெய்யப்பட்டார்…

*சுற்றுப்போட்டியின் தொடராட்டநாயகனாக சைனிங்ஸ் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த அபிநயன் தெரிவுசெய்யப்பட்டார்…