வல்வை செய்திகள்

எமது இதய அஞ்சலி அமரர் திருமதி. கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர்)

எமது இதய அஞ்சலி………!!!!!!!!!!!!

அமரர் திருமதி. கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர்)
வல்வை மண்ணின் கல்விப்பணிக்கு காலத்தால் அழியாத பணி செய்து இன்று மீளாத்துயிலுக்கு சென்றுவிட்ட எமது பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு பாடசாலை சமூகம் தனது இதய அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றது. அதேநேரம், அவர் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளில் சிலவற்றை மீட்டுப்பார்ப்பது அவருக்கு நாம் செய்யும் ஓரு சிறு காணிக்கையாக கருதுகின்றோம்.

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முதல் அதிபராக திருமதி. கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர்) அவர்கள் 1972 ம் ஆண்டு பொறுப்பேற்று எமது பாடசாலையை திறம்பட வழிநடாத்தினார். ஆனாலும் அவரின் சேவையானது 07 மாதங்களுடன் எதிர்பாராத விதமாக நிறைவடைந்தது. எல்லாம் வல்ல இறைவனின் அருளினால் அவர்கள் மீண்டும் 1981.05.06 அன்று அதிபராக பொறுப்பபேற்றுக்கொண்டார். இவரது காலத்திலேயே எமது பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டப்பட்டதுடன் பாடசாலையில் க.பொ.த.உயர்தரத்திற்க்கான கலை, வர்த்த, விஞ்ஞான, கணித பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் பாடசாலையில் இன்று காணப்படும் இரண்டு மாடிக்கட்டடங்களும் கட்டப்பட்டன.

இவரின் காலத்தில் கல்விகற்ற பல மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதற்கும் வழிகாட்டியாக செயற்பட்டார்.

அன்று காணப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளிலும் பாடசாலையில் கல்விபயின்ற மாணவர்களின் பாதுகாப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் பெரும் அரணாக செயற்பட்டவர். இவரின் காலத்திலேயே எமது பாடசாலையில் 1000 மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்றதும், சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்வி மற்றும் ஏனைய துறைகளில் உச்ச நிலையில் இருந்தமையும் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

இச்சாதனை நாயகி தனது அறுபதாவது வயதில் எமது பாடசாலயில் தனது இறுதியான கல்விப்பணியினை நிறைவு செய்து 1992.04.22 அன்று இளைப்பாறிச்சென்றார். எமது பாடசாலையின் வளர்ச்சியில் அமரர் திருமதி. கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர்) அவர்களின் பங்கு காலத்தால் அழியாத ஒன்றாக என்றும் எம்மனதில் உள்ளதனை எமது பாடசாலை சமூகம் நன்றியுடன் மீட்டிப்பார்கின்றது.

இந்நேரத்தில் அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரின் குடும்பதரிற்கும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களிற்கும் பாடசாலை சமூகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.

பாடசாலை சமூகம்

                                                                   யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்.