வல்வை செய்திகள்

வல்வை உதை- பருத்தித்துறை யுனைற்றைற் மற்றும் டயமன்ஸ் ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.

வடமராட்சி சிரேஷ்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக்கழகம் வல்வை வீரர்கள் அனுசரணையுடன் நடாத்தும் வடமராட்சி ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் லீக் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024.

பருத்தித்துறை யுனைற்றைற் மற்றும் டயமன்ஸ் ஆட்டம் சமனிலையில்

02/10/2024 நடைபெற்ற ஆட்டத்தில் யுனைற்றைற் அணியினை எதிர்த்து டயமன்ஸ் அணியானது மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எவ்வித கோல்களினையும் போடாத நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் ஆட்டநியகனாக யுனைற்றைற் அணியின் ரங்கன் தெரிவு செய்யப்பட்டார்.