வல்வை செய்திகள்

மூளாய் வளர்மதி உதை-அடுத்த சுற்றுக்கு நுழைந்தது வல்வை அணி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாம லீக்கின் அனுமதியுடன் மூளாய் வளர்மதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர் கொண்ட யாழ் மாவட்ட ரீதியிலான தோழர் தவம் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்.− 2024

07/10/2024 இடம்பெற்ற போட்டியில் அராலி பாரதி அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் 1:1 என்று போட்டியானது சமநிலையில் முடிவுபெற சமநிலை தவிர்ப்பு உதையில் 5:3 என்ற கோல்கணக்கில் வல்வை அணியானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

போட்டியின் ஆட்டநாயகனாக வல்வை அணியைச் சேர்ந்த கபிலன் தெரிவு செய்யப்பட்டார்.