வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அபிவிருத்தி, மற்றும் தற்போதய நிலைவரம், அதனை முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அபிவிருத்தி, மற்றும் தற்போதய நிலைவரம், அதனை முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டம் ஆனது ஊரணி வைத்தியசாலையின் அதிகாரியின் டாக்டர் மாதவன் தலைமையில் 06.02.2025) வியாழக்கிழமை மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
இக்கூட்டத்தில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர், மாகாண சுகாதார அமைச்சின் பிரதிநிதி, ஆளுனரின் பிரதிநிதி ஆகியோர் வருகை தந்தனர்.
வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் அவர்களினால் யாழ் மாவட்டங்களுக்கு தேவையான வைத்திய ஆளணி பொருளணி கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டது.
*மைனஸ் ஸ்டாப் 650 பேர் தேவை
*மருந்து வழங்குனர் 8 வருடங்களாக பயிற்ச்சி வழங்கப்படாமல் இருந்து தற்போது ஆரப்பிக்கப்பட்டுள்ளது 1.1/2வருடங்கள் பயிட்ச்சி
*jmos மரண உடல் பரிசோதகர் பற்றாக்குறை
*அவசர வண்டி சாரதி பற்றாக்குறை 15 பேர்
*mlt பற்றாக் குறை தொடர்பாகவும் தெரிவிக்ப்பட்டது.
உடனடியாக அமுலில் வருமாறு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* மகப்பேறு கிளினிககை இயங்கசெய்வது என்றும் மாதம் இரு முறை மகபேற்று நிபுணர் வருகை தருவதாகவும். கிழமைக்கு ஒரு தரம் பொது வைத்திய நிபுணர் வருகை தருவதாகவும்
*இரத்த பரிசோதனனையை துரிதமாக பெற அல்லது தற்காலிகமாக (MLT) இரத்தபரிசோதிப்பவரை ஒழுங்குபண்னுவதாகவும்
*OPD யில் நோயாளர்களை தாமதம் ஏற்படாமல் மேலதிக வைத்தியரை ஈடுபடவைப்பதாகவும்
*இறந்த உடல்களை இங்கேயே பிண அறை வசதிகளையும் பிரேதபரிசோதனைகளை செய்ய ஒழுங்கு செய்வதாகவும்.
*வைத்திய சாலை புணரமைத்து தருவதுக்கு ஏற்ற வரைவை தருமாறும் கோரியுள்ளார்கள்.
* 100k மின்பிறப்பாக்கிக்கு உடனடி குறைபாடுகளை நிவர்த்திசெய்வதாகவும்..
குறிப்பாக பலராலும் பேசப்பட்ட விடயம் யாதெனில்.டாக்டர் மயிலேறும்பெருமாள் பொறுப்பதிகாரியாக இருந்த வேளையில் அத்தனை நிபுணத்துவாங்களும் சிறப்பாகவும் இருந்திருந்தமை பலராலும் கூறப்பட்டிருது தற்போது உணரப்படுகின்றது என்பதை தெரிவித்து இருந்தார்கள்.




















