செலான் வங்கி நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆட்டங்கள் நேற்று இரு மைதானத்தில் நடைபெற்றது. வல்வை அணி நேற்று காலை கருணாகரன் அணியுடன் மோதியது.இதில் 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாவது சுற்று நேற்று மாலை நடைபெற்றது. இதில் வல்வை அணி உடுப்பிட்டியூத் அணியுடன் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை.சமநிலை தவிர்ப்பு உதையில் வல்வை அணி 4 – 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதி ஆட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 4 மணிக்கு டயமன்ஸ் மைதானத்தில் நடைபெறும். காலிறுதியில் வல்வை அணி நவஜீவன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 2௦14 இல் 3 போட்டிகளிலும் வல்வை அணி வெற்றி பெற்றுள்ளது……….











