வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டியின் படங்கள் 12.02.2014

1.02.2014 நடைபெற்ற போட்டியில் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் மோதவிருந்தது. இந்த ஆட்டத்திற்கு மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் சமூகமளிக்காத காரணத்தால் வெற்றி வாய்ப்பு சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
12.02.2014 இன்றைய ஆட்டத்தில் முதலாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழக A அணியை எதிர்த்து தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழக A அணி 8:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சமரபாகு நியூட்டன் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.