வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

2013 இல் வல்வை உதைபந்தாட்ட அணியின் பதிவுகள்..

வல்வை அணி 2013 இல் 62 உதைபந்தாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளது.இதில் 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.23 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது.2013 இன் பிரதேச செயலக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.17 உதைபந்தாட்ட தொடர்களில் பங்குபற்றியுள்ளது.சமாதான கிண்ணத்தின் 3ம் இடத்தினை பெற்றுக் கொண்டது.இந்த சுற்றுப்போட்டியில் தலை சிறந்த 12 அணிகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.றோயல் விளையாட்டு கழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான தொடரில் வடமராட்சியின் ஒரே ஒரு அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.மைலோ கிண்ண உதைபந்தாட்ட தொடரில் மாவட்டத்தின் 24 அணிகள் தெரிவு செய்யப்பட்டன அந்த தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது.புத்தூர் எவரெஸ் விளையாட்டு கழகம் நடத்திய மாவட்ட ரீதியிலான தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது வல்வை அணி பருத்தித்துறை பிரதேச செயலகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட மட்ட போட்டியின் அறையிறுதிவரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.இந்த வருடதினையும் வல்வை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *