வல்வை செய்திகள்

35வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டம். றெயின்போ அணியை 4:2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது தீருவில் அணி.

35வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டம்.
றெயின்போ அணியை 4:2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது தீருவில் அணி.

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பமாகியது.

இன்றைய முதலாவது போட்டியில் தீருவில் அணி றெயின்போ அணியை 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக தீருவில் அணி சார்பாக 3 கோல்களை போட்ட சண்முகதாஸ் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.இவர் முன்னைய வல்வை உதைபோட்டிகளில் நீண்ட காலமாக பங்கு பற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *