அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வாழைச்சேனை காகித ஆலையின் பிரதம இரசாயனவியலாளர் ஓய்வு பெற்ற திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற இரத்தினசாமி ஆத்தாட்ப்பிள்ளை தம்பதியின் இளைய புத்திரரும் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை தையல்நாயகி தம்பதியின் மூத்த மருமகனும் ஆவார். விமலேந்திராணியின் அன்புக்கணவரும் சுகன்யா (சுவிற்சர்லாந்து), நிசாஹரன் (கனடா), விமலாஹரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ரவிசங்கர் (சுவிற்சர்லாந்து), சசிகலா (கனடா), ரத்னா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்வினி (சுவிற்சர்லாந்து), அனிக்கா (கனடா), அபினா (கனடா), ரத்னிகா (கொழும்பு), திருநேயன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அமரர் சிவஞானசுந்தரம், அமரர் குமாரசுந்தரம், அமரர் கார்மேகசுந்தரம், நிர்த்தனசுந்தரம்(கொழும்பு), அமரர் கணேசசுந்தரம், ஞானாம்பிகை(கனடா),, விஜயாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். அமரர் சரஸ்வதி, மகேஸ்வரி(தொண்டைமனாறு), அமரர் லக்சுமிதேவி, சுந்தரி, அமரர் நடேசன், சுசீலாதேவி(அவுஸ்திரேலியா), பொன்னுச்சாமி (கனடா) மற்றும் அமரர் ஜெயசோதிவேல், நிர்மலா(வல்வெட்டித்துறை), சக்திவேல்(கனடா), ஞானவேல்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடலானது 30.10.2025 வியாழக்கிழமை 9.00 am கல்கிசையில் உள்ள மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று கல்கிசை தெகிவளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இதனை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர் தொடர்புகட்கு விமலாஹரன்-0094 77 436 1068 நிசாஹரன்-001 (437) 443-5377