பரிசளிப்பும், கௌரவிப்பும் வல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு- பகுதி 02
வாழ்நாள் சாதனையாளர்விருது- காலத்தின் தேவை
வல்வை உதயசூரியன்கழக 50வது ஆண்டுநிறைவான பொன்விழா ஆண்டு இந்தமுறை சிறப்பாகவும் பெருமகிழ்வுடனும் எல்லோருடைய பழையநினைவுகளை மீட்டக்கூடிய விதத்திலும் மூன்றுநாட்களாக நடைபெற்றது.அதன் இறுதிநாளில் பொன்விழாநிகழ்வுகளின் மகுடமாக ‘வாழ்நாள்சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.
உதயசூரியன்கழகம்,வல்வைபுளுஸ்,வல்வை என்ற தளங்களில் தமது செயற்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.மொத்தத்தில் வல்வையின் விளையாட்டுத்துறைக்கு காலம்கடந்தும் நிற்கக்கூடிய வகையில் தமது ஆளுமை,தமது திறமை,தமது வழிகாட்டுதல் என்பனவற்றை வழங்கிய மூவருக்கு இந்த வருடம் வழங்கப்பட்டது.
உதயசூரியன்கழகத்தின் இன்றைய வளர்ச்சி,அது நிலைத்துநிற்கும் காரணம் என்பனவற்று பின்னால் இருந்து அயராது செயற்பட்டுவருபரான திரு.தி.கனகசபாபதிபிள்ளை(கவிஞன்அண்ணா) அவர்களுக்கும்,
உதயசூரியன்கழக உதைபந்தாட்ட,கரப்பந்தாட்ட வெற்றிகளுக்கு முதன்மைக்காரணங்களில் ஒருவரும்,வல்வெட்டித்துறை விளையாட்டுத்துறையின் ஒரு அடையாளங்களில் ஒருவருமான திரு.தேவசிகாமணி (கட்டிஅண்ணா) அவர்களுக்கும்,
வல்வெட்டித்துறை என்ற பெயரை வெளிஇடங்களில் விளையாட்டுத்துறையில் இன்றும் நிலைநாட்டும் வல்வைபுளுஸ்கழகத்தை தொடர்ச்சியாக கொண்டு நடாத்தி,சுற்றுப்போட்டிகளில் பங்குபெறவைத்து உழைக்கும் திரு.மு.தங்கவேல்(தங்கவேல்அண்ணா) ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது மிகமிக பொருத்தமானதும் காலத்தின் தேவையும் ஆகும்.
திறமையானவர்களும்,சாதனையாளர்களும்,வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் உழைப்புக்கு காரணமானவர்களும் கௌரவிக்கப்படும் ஒரு சமூகமே மேலும் மேலும் வளர்ச்சி பெறும்.மேலும் வெற்றிகளையும் அடையும்.இந்த விருதுகளை பெற்றுக்கொள்ளும் சாதனையாளர்களை நாமும் வாழ்த்துவோம்.அத்துடன் இதனை நெறிப்படுத்தி செயற்படுத்தி விருது வழங்கியவர்களையும் பாராட்டுவோம்.















































































































































































