Search

4ம் மாடியில் சித்திரவதை அனுபவிக்கும் கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட ஈழத் தமிழன்!..

சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இதைக் கனடா அரசு நன்கு அறிந்தும் மேற்கூறிய அகதியை அவருடைய விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலாகும். ஜனநாயக நாடென்று தன்னைக் கூறிக்கொள்ளும் கனடாவுக்கு இது பொருத்தமானதல்ல.
ஐநா நிறைவேற்றிய அகதிகள் பாதுகாப்புச் சட்டம் எந்த நாட்டை விட்டுத் தப்பியோடி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோருகிறாரோ அவரை அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்று சொல்கிறது. இந்த விதியைக் கனடா மீறியுள்ளது.
இலங்கையில் நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்தாலும் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போதல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் விசாரணையின்றித் தண்டிக்கப்படாமல் நீடிக்கின்றன.என்று தெரிவிக்கப்படுகிறது.
கனடா அரசு இனியாவது தவறை உணர்ந்து நாடுகடத்தப்பட்டு 4ம் மாடியில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்குரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *