Wednesday, October 7, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

தமிழினத்தின் ஒரே தலைவர் பிரபாகரன்தான்: சீமான்

by admin
27/11/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தன் குடும்பத்தைக் காக்க இனத்தை பலிகொடுத்த தலைவர்கள் மத்தியில் தனது இனத்தின் விடுதலைக்காக போராடியது மட்டுமின்றி, அதற்காக தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் தியாகம் செய்த பிரபாகரனே தமிழினத்தின் ஒரே தலைவர் என்று செந்தமிழன் சீமான் கூறினார்.

 தமிழீழ தேசத்தின் தலைவரும், தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவும் திகழும் மேதகு வே. பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை மாலை திருப்பெரும்புதூரில் நாம் தமிழர் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்டக் கிளை, அவருடைய  பிறந்தநாள் கூட்டத்திற்கு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தது. காஞ்சி மேற்கு மாவட்டத் தலைவர் இராசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரபாகரன் தமிழினத்தின் விடுதலைக்கு ஆற்றிவரும் பங்கை எடுத்துரைத்து நீண்டதொரு உரையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். அவருடைய உரை வருமாறு:

 “இனமே செத்தாலும் பரவாயில்லை, தன் குடும்பம் வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிற தலைவர்கள் மத்தியில், தான் நேசித்த இனத்திற்காக தான் பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளையும் இழந்தாலும் இனம் வாழ வேண்டும் என்பதற்காக போராடிவருபவர் நம் தலைவர் பிரபாகரன். அதனால்தான் அவர் தமிழினத்தின் முகமாகவும், முகவரியாகவும் திகழ்கிறார். சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தில் இருந்து தன் இனத்தை காக்க, மாபெரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அந்தத் தலைவரை பயங்கரவாதி என்று கூறினார்கள். ஆனால் அவரைப் போன்றதொரு அன்புமிக்க, கருணைமிக்க ஒரு மனிதனை இந்த உலகில் காண முடியாது.

 பிரபாகரன் துவக்கியைத் தூக்கி களத்தில் நின்ற காலத்தில் தமிழினம் ஈழத்து மண்ணில் சுதந்திரமாக நின்றதா? இல்லையா? அதுதான் கேள்வி. ஆனால் இன்றைக்கு என்ன நிலை? மொத்த இனமும் தனது பாரம்பரிய பூமியிலேயே அகதியாக, அனாதையாக, அடிமையாக, வீடற்று, நிலமிழந்து அன்னாடிகளாக அலைகிறதே? அவரை பயங்கரவாதி என்று கூறுபவர்கள், அவரால் பாதுகாக்கப்பட்ட அந்த மக்களை ஏன் காப்பாற்ற முன்வரவில்லை? நமது எதிரி சிங்கள மக்களோ அல்லது சிங்கள தேசமோ அல்ல, மாறாக, சிங்கள அரசுதான், அதன் முப்படைகளும்தான் என்பதை உணர்த்தி, படைகளுக்கு எதிராகத்தான் போர் புரிந்தார் பிரபாகரன். அதனால்தான் கட்டுநாயாக விமான நிலையத்தின் மீதும், அதன் பிறகு அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது நடத்திய மாபெரும் தாக்குதலில் கூட ஒரு அப்பாவி சிங்களன் கூட சாகாமல் பார்த்துக்கொண்டார்.

 இதே நேரத்தில் சிங்கள படைகள் என்ன செய்தன? தாய், தந்தையரை இழந்து நின்ற அனாதை தமிழ் பிள்ளைகள் வளர்க்கப்பட்ட செஞ்சோலையின் மீது போர் விமானங்களைக் கொண்டு குண்டு வீசி, 54 இளம் சிறார்களைக் கொன்றது சிங்கள படை. ஆனால் இந்த கொடுஞ்செயலை பயங்கரவாத நடவடிக்கை என்று ஒரு அரசும் கண்டிக்கவில்லை. மாறாக, நம்மை பார்த்து பயங்கரவாதி என்கிறது. ஏன் அப்படி கூறியது என்றால் பிரபாகரன் தன் மக்களை நேசித்த தேசியவாதியாக இருந்ததாலும், அவர்களின் விடுதலையை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மறுத்தாலும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது. பிரபாகரனை போல தன் மண்ணையும், மக்களையும் நேசித்த தலைவர் ஒருவருமில்லை.

 நம் இனத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு நடத்திய போரில் அதற்கு எல்லாவிதத்திலும் துணை நின்ற தெற்காசிய வல்லாதிக்கமான சீனாவும், உலக வல்லரசுகளும் முதலில் உதவ முன்வந்தது விடுதலைப் புலிகளுக்குத்தான். ஆனால், தனது மக்களின் விடுதலைப் போராட்டத்தை வல்லாதிக்கங்களின் துணையோடு முன்னெடுக்க பிரபாகரன் மறுத்தார். தனது மண்ணில் வெரொரு சக்தி கால் பதிப்பதை அனுமதிக்க மறுத்தார். சீன நாட்டின் உதவியை பெற்றுக்கொண்டு விடுதலை போராட்டத்தை நடத்தலாமே என்று கருத்து கூட எழுந்தது. சீனாவின் உதவியை நாடினால் அது தான் நேசிக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானதாக ஆகிவிடும் என்பதற்காக அதனை ஏற்காதவர் தலைவர் பிரபாகரன்.

 நம் தலைவரை போல இந்திய நாட்டை நேசித்த தலைவர் ஒருவருமில்லை. இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசையே தனது வழிகாட்டிய ஏற்றார், மாவீரன் பகத் சிங்கை முன்னுதாரணமாக போற்றினார் நம் தலைவர் பிரபாகரன். ஆனால் இந்தியா என்ன செய்தது? உலகில் எந்த ஒரு இனம் விடுதலைக்காக போராடினாலும், அதனை நோக்கி எமது உதவிக்கரம் நீளும் என்றார் இந்த நாட்டின் முதல் பிரதமர் பெருமகனார் நேரு. ஆனால் இந்திய மத்திய அரசு, நமது விடுதலைக்கு மட்டும் உதவிட மறுத்தது. மறுத்ததோடு மட்டுமின்றி, நம் விடுதலையை அழிக்க முற்பட்ட சிங்கள தேசத்துடன் கைகோர்த்து நின்று தமிழினத்தையே அழித்தொழிக்க துணை போனது.

 எனது தலைவனுக்கு ஒரு கனவு இருந்தது, அது இனத்தின் விடுதலை. நமக்கென்று ஒரு வரலாறு இல்லையடா தம்பி. விடுதலைப் பெற்ற ஒரு இனமாக தமிழினம் இல்லாது இருந்தாலும், அதற்காக போராடி செத்தார்கள் என்ற வரலாறாவது இருக்கட்டுமே என்று என்னிடம் கூறிய தலைவன் பிரபாகரன். அவன் தன் மண்ணிற்காகவும், தான் நேசித்த மக்களின் மானம் காக்கவும் போராடிய மாபெரும் தலைவன்”

இவ்வாறு சீமான் பேசினார். இக்கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர் சந்திரசேகரன், தமிழன் தொலைக்காட்சி அதிபர் கலைக்கோட்டு உதயம், பன்னாட்டுத் தொடர்பாளர் கா. அய்யநாதன், புலவர் மறத்தமிழ் வேந்தன், அன்பு தென்னரசன், அமுதா நம்பி, ஆவல் கணேசன் ஆகியோரும் பேசினர்.

 பேராசிரியர் தஞ்சை இறையரசன் எழுதிய ‘செம்மொழியும் சிவந்த ஈழமும்’ என்ற புத்தகத்தை சீமான் வெளியிட, அதனை கலைக்கோடு உதயம் பெற்றுக்கொண்டார்.

 சி. தங்கராசு
தலைமை நிலைய செயலர்
நாம் தமிழர் கட்சி
Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post

கிளிநொச்சியின் கிராமங்களில் கார்த்திகை தீபங்களை சப்பாத்துக் கால்களால் உதைந்த இலங்கைப் படையினர்:-

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.