Friday, October 23, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு என்ன பயன்?

by admin
18/03/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுக் கூட்டத்​தில், அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்’ என்று தி.மு.க. உள்பட அனைத்து தமிழகக் கட்சிகளும் போர்க்குரல் எழுப்புகின்றன. அதே சமயம், ‘இந்தத் தீர்மானம் தமிழர்​களுக்கான நீதியைப் பெற்றுத் தராது’ என்று ஈழத் தமிழர் ஆதரவு தமிழின அமைப்புகள் மாறுபட்ட குரலை எழுப்புகின்றன.

 

இதுபற்றி ‘மே 17’ இயக்கத்​தின் ஒருங்கிணைப்பாளர் திரு​முருகனிடம் பேசினோம். ”ஈழத் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்த ஈழப்போர் பற்றி, 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டஃப்லின்  தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியில், ‘ஈழப் போரில் இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்களிலும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டது’ என்று சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் தீர்ப்பு அளித்தனர்.

 

அதோடு, ‘புலிகள் மீது தடை விதித்ததன் மூலம் அமைதி முயற்சியை சர்வதேச சமூகம் சீர்குலைத்து விட்டது’ என்றும் குறிப்பிட்டு இருந்தனர். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர் அமைப்புகளும் டஃப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதியாக இருந்தது.

பிறகு, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். தரூஸ்மன் தலைமையிலான அந்த வல்லுநர்குழுவோ, போருக்கான காரணங்​களை தன் விசாரணை வரம்புக்குள் எடுத்துக்கொள்ளவே இல்லை.

 

போர் சம்பவத்தை மட்டுமே மையமாக வைத்து விசாரணையை நடத்தி முடித்தது. எனவே, தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதால்தான், ஈழத்தில் விடுதலைப்போர் நடந்தது என்ற அடிப்படை அம்சமே அதில் விடுபட்டுப் போனது. அதனால், இரு தரப்புமே போர்க்குற்றம் செய்தார்கள் என்று சமமாகப் பாவித்து அறிக்கையை வெளியிட்டது. இனப் படுகொலை என்பதையே பதிவுசெய்யாமல் விட்டுவிட்டார்கள்.

 

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் தீர்மானம் வருகிறது. ‘அமைதி முயற்சி என்ற பெயரில் தமிழர் தரப்பின் போர் வலிமையையும், போராளிகளின் நிதி வலிமையையும் பலம் இழக்கச் செய்ததில் அமெரிக்க அரசுக்கும் பெரும்பங்கு இருந்து ள்ளது’ என்று,  இலங்கையில் பணியாற்றிய ராபர்ட் ஃப்ளேக் (தெற்காசிய பகுதிக்கான செயலர்) வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

 

அமெரிக்காவின் ராடார் இலங்கையின் வடபகுதியில் புலிகளைக் கண்காணிக்க நிறுவப்பட்டது. இந்தியா, சீனாவின் ஆயுதங்கள் மற்றும் அமெரிக்க ராடார்கள் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் ராணுவக் கால்பதிப்பு ஒப்பந்தம், மன்மோகன் அரசின் சிறு எதிர்ப்பும் இல்லாமல் 2007 மார்ச் 5-ம் தேதி, நடந்து முடிந்தது. அதே கூட்டணிதான், இப்போது மீண்டும் கைகோத்துள்ளது. தான் ஒரு ஒரு ஜனநாயக நாடு என்பதை நிறுவுவதற்காக, அமெரிக்கா இப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

 

இலங்கையில் முழுமையாகக் காலூன்ற விரும்பும் அமெரிக்கா, போர்க்குற்ற விசா ரணையின் மூலம் ராஜபக்ஷே அரசைத் தூக்கி எறிந்துவிட்டு, ரணில் அல்லது வேறு யாரோ ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமரவைத்து, தன் சொல்பேச்சைக் கேட்கும் பொம்மை அரசை உருவாக்க விரும்புகிறது.

 

இதில், தமிழர்களின் நலன் பற்றிய பேச் சுக்கள் இல்லை என்பதுதான் கவலை. தனக்கு ஆதரவாக நின்ற அதிபர்களையே மாற்றி, ஆட்சிகளைக் கவிழ்க்கும் அமெரிக்க அரசு, தான் சந்தேகப்படும் ராஜபக்ஷே போன்ற நபரை எப்படி விட்டுவைக்கும்?

 

‘இனப் படுகொலைக் குற்றத்தை சர்வதேச விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்’ என்ற டஃப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேன்மேலும் முன்கொண்டு செல்வதுதான், தமிழர்களின் கடமையாக இருக்க முடியும்” என்கிறார் திருமுருகன்.

கனம் பொருந்திய வார்த்தைகள்!

– இரா. தமிழ்க்கனல்

படம்: பொன்.காசிராஜன்

நன்றி : ஜூனியர் விகடன்

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post

மரண அறிவித்தல்-திருமதி பாபு வசந்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.