Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

ஈழ அகதிகளை திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி

by admin
13/02/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழ் சொந்தங்களை தமிழக காவல் துறை மிரட்டி திருப்பி அனுப்ப முயற்சிப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
 இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்படி ஒரு அறிவிக்கப்படாத நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டு வருவதாக ஈழத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இப்போது போர் நடக்கவில்லையென்றும், எனவே தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் அடைய அனுமதிக்க முடியாது என்று காவல் துறை மறுத்து வருவதாகவும் நம் சொந்தங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாடு திரும்பி, மீண்டும் அங்கு வாழச் சென்ற பலரும், அங்கு சிங்கள இராணுவத்தின் ஒடுக்குமுறை காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அகதிகளாக குறிப்பிட்டு, பதிவு செய்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல் துறையினர் கூறுகின்றனராம்.

இப்படி ஒரு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதா என்று கேட்டதற்கு, இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனராம். இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல் இலங்கையில் இருந்து வரும் எவரையும் அகதிகளாக பதிவு செய்து ஏற்க வேண்டாம் என்றும் மறுவாழ்வுத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுவது உண்மையா என்பதை தமிழக அரசு உடனடியாக விளக்க வேண்டும். இலங்கையில் சிங்களர்களுக்கு இணையான அரசியல் சம உரிமை தமிழர்களுக்கு தரப்படும் வரை தொடர்ந்து போராடுவேன் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்த தமிழக முதல்வர், அங்கு இன்னமும் தமிழினம் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பாரா என்கிற ஐயம் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. இதனை தமிழக முதல்வர் உடனடியாக விளக்கிட வேண்டும்.

தனது சொந்த நாட்டில் பாதுகாப்புடனும், உரிமையுடனும் வாழ முடியாத ஒரு சூழலில், வேறு ஒரு நாட்டில் அடைக்கலம் தேட எந்த ஒரு மனிதருக்கும் உரிமை உள்ளது என்றே ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான பிரகடனமும், உலக மனித உரிமை பிரகடனமும் கூறுகின்றன. உண்மை இவ்வாறிக்கையில், தங்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வரும் ஈழத் தமிழ் சொந்தங்களை இங்கு வாழ அனுமதிக்காமல் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவது என்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும். இது இலங்கை அரசின் தமிழின அழித்தலுக்கு துணை போகும் நடவடிக்கையாகும். எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு ஈழத் தமிழ் சொந்தங்களை அகதிகளாக பதிவு செய்து இங்கு வாழ அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post
உதயசூரியன் கழக (ஜ.இ) வருடாந்த பொதுக்கூட்டம் (17.02.2013)

உதயசூரியன் கழக (ஜ.இ) வருடாந்த பொதுக்கூட்டம் (17.02.2013)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.