Sunday, October 25, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

சுகப்பிரசவமா கவனமா இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்!

by admin
24/03/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும் பார்க்கக்கூடாது என்று பாடாய் படுத்திவிடும் சிசேரியன் முறை குழந்தை பிறப்பு. எனவேதான் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கர்ப்பப்பை இறக்கம்

சுகப்பிரசவம் ரொம்பவே நல்லதுதான். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்கள்ல கவனமா இல்லாட்டி, கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்… இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும்.

பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், அதிக எடை தூக்குதல், ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்வதன் மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை பொதுவாக இருக்க வேண்டிய இடத்துலேர்ந்து இறங்கிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றின் முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தைத்துவிடலாம். இதனால் கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டால் அது தனக்குப் பக்கத்துல உள்ள சிறுநீர்ப்பை, மலப் பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர் பை இறங்கத் தொடங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள் எப்போதும் சிறுநீர் தங்கி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும்போது சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் அவர்கள்.

பிரச்சினை தீவிரமாகும்

எதையுமே கவனிக்காமல் விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post

அமெரிக்காவை புறக்கணித்து நாடு திரும்புகின்றார்கள்!?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.