Tuesday, October 13, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

தன் மக்களைக் கொல்பவர்களுக்கு தாமே பயிற்சி அளிக்கிறது இந்தியா – திருமா கண்டனம்!

by admin
22/04/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய கேவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை. இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சுஜாதா, தரங்கிணி,வருணா ஆகிய மூன்று கப்பல்கள் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன. பயிற்சி பெற்ற சிங்களப் படையினருக்கு இந்திய தூதரகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பகே என்பவர் இலங்கைக் கடற்படையினரில் 80% பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இது தமிழக மக்களைப் புண்படுத்துவதாக இருக்கிறது தமிழக மீனவர்கள்மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவோடுதான் நடத்தப்படுகிறதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதும் அவர்கள் இந்திய மீனவர்களையே தாக்குவதும் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய கேவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை. இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதென்பது அதற்கு தேசிய ஒருமைப்பாட்டின்மீது நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது. இது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று சுட்டிக்காட்டுகிறோம்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post
சிரியா: அதிபர் படையின் தாக்குதலில் 80 பேர் பலி

சிரியா: அதிபர் படையின் தாக்குதலில் 80 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.