விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்று சென்றிருந்த ஒருவர் அங்கு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.ராமசந்திரன் சிவகுமார் என்ற 41 வயதுடைய அவர், கடந்த பத்து வருடங்களாக இராணுவத்தினரால் சுடப்பட்ட குண்டு ஒன்றை தலையில் தாங்கியவாறு வாழ்ந்து வந்தார்.
அவர் கடந்த 2001ம் ஆண்டு பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து பெற்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர் தமது இல்லத்தில் வழுக்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததாக பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்










