Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் கச்சத்தீவு பிரச்சினைக்கு சட்டரீதியாக நிரந்தர தீர்வு காணப்படும் ஜெயலலிதா அறிவிப்பு

by admin
26/03/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டதைப் போல கச்சத்தீவு பிரச்சினையிலும் சட்டரீதியாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம்

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.), மகாலிங்கம் என்கிற வி.பி.நாகமலை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு), கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினார்கள். அதற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

கருணாநிதி ஆட்சியில் கச்சத்தீவு தாரைவார்ப்பு

இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தபோது இந்தப் பிரச்சனை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 –ம் ஆண்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக இருந்தவர் கருணாநிதிதான்.அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக, தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

1991–ம் ஆண்டு நான் முதன் முறையாக முதல்–அமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து காப்பாற்ற கச்சத்தீவினை மீட்பதை தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து, இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தினேன்.

மத்திய அரசை வலியுறுத்தவில்லை

குறைந்தபட்சம் நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவிற்கு சென்று மீன்பிடிக்கும் உரிமையையாவது பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரை பலமுறை வற்புறுத்தி இருக்கிறேன். இருப்பினும், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.2006–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அவர் தயவில்தான் மத்திய அரசும் இருந்தது. தன் நலத்திற்காக பல மிரட்டல்களை மத்திய அரசுக்கு விடுத்த கருணாநிதி, தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக கச்சத்தீவினை மீட்டுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவு பற்றிய எண்ணமே கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது.

டெசோ மாநாட்டில் தீர்மானம்

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்டு 12–ந்தேதி நடைபெற்ற புத்துயிரூட்டபட்ட ‘டெசோ’ மாநாட்டில், ‘‘கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு, தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படை தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.1974–ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, அப்போது முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி அதைத்தடுக்க தவறிவிட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960–க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தாரைவார்க்க முயன்றபோது, அதனை எதிர்த்து அப்போதைய மேற்கு வங்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்திய நாட்டுக்கு சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்கு கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்’’ என 1960–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

வாழ்வாதாரமே கேள்விக்குறி

மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை 1974–ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்–அமைச்சர் கருணாநிதி பின்பற்றி இருப்பாரேயானால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்காது. ஆனால் அன்றைய தமிழ்நாடு முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி இதைச் செய்ய தவறிவிட்டார்.கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிவதையும், அவர்களை ஆயுதங்களால் துன்புறுத்துவதையும், இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. தங்களது உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழிலை தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதும், பிரதமரை வலியுறுத்தியும், தமிழக அரசு அதிகாரிகள் மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் அவர்களை மீட்டெடுத்து இருக்கிறேன்.தமிழக மீனவர்களும் இந்திய நாட்டு குடிமக்கள்தான் என்பதை பிரதமருக்கு உணர்த்தி, வலுவான, உறுதியான, ஆக்கப்பூர்வமான, ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

தொடர்ந்து மவுனம் சாதிப்பு

பரம்பரை பரம்பரையாக, மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசோ தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ, தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.மத்திய அரசின் கையாலாகாத்தனம் காரணமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை நடைபெற்று இருக்கிறது. இது உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தமிழக மீனவர்களின் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும். எனவேதான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கிணங்க, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, இதுகுறித்த இந்தியா–இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடுத்துள்ளேன்.இந்த வழக்கில், தமிழக அரசின் வருவாய்த்துறையும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் எடுத்து விசாரிக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பல்வேறு சலுகைகள்

இதுமட்டுமல்லாமல், இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும்போது, அவர்களை மீட்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு எடுத்து வருகிறது. மீனவர்களின் இன்னல்களை உணர்ந்து, அவர்களுக்கென பல்வேறு சலுகைகளை எனது அரசு அளித்து வருகிறது.ராமேஸ்வரத்தைச்சேர்ந்த 5 மீனவர்கள் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, போதைப் பொருள் கடத்தியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 5 மீனவர்கள் சார்பாக இலங்கை நீதிமன்றத்தில் வாதாடி, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கையை எனது அரசு எடுத்துள்ளது.

நிவாரண உதவி ரூ.2 லட்சம்

அந்த வழக்கிற்கான செலவுகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்றுள்ளது. இந்த 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக, தலா ரூ.2 லட்சம் எனது தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது.இதுமட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்கள் அன்றாட வாழ்க்கை நடத்திடும் வகையில், மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தவிர, அண்மையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் உள்ளனர்.

இனிமேலாவது நடவடிக்கை

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களை இந்திய அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கும், கொடூரமாக துன்புறுத்தப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வலுவான நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என்றும், டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தருணத்தில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதோடு, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இந்தியா–இலங்கை நாடுகளுக்கு இடையேயான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

சட்டரீதியாக நிரந்தர தீர்வு

இல்லையெனில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ய சுப்ரீம் கோர்ட்டை அணுகி வெற்றி பெற்றதைப்போல், கச்சத்தீவு பிரச்சினையிலும் என்னால் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து சட்டரீதியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post
வல்வை சிவன் கோவில் பதினான்காம் திருவிழா படங்கள்  25.03.2013

வல்வை சிவன் கோவில் பதினான்காம் திருவிழா படங்கள் 25.03.2013

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.