Monday, October 26, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

யாழ். மாணவர்கள் பயங்கரவாத புலனாய்வு பொலிசாரிடம்!

by admin
01/12/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின்(ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.

இவர்கள் நால்வரும் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு, டிஐடி என்று அழைக்கப்படுகின்ற பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்ததார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜனமேகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த தர்ஷானந்த், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சொலமன் மற்றும் மருத்துவபீடத்தைச் சேர்ந்த சுதர்சன் ஆகிய நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இவர்களின் கைதுக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியாதிருப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் கூறினார். ‘அரசு வன்முறையை பிரயோகிக்கிறது’ மாணவர்கள் மீது பொலிசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர்.

மாணவர்கள் மீது பொலிசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்வதற்காக பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி, சிரேஸ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் புஸ்பரட்னம் ஆகியோர் இரவு வரை காத்திருந்தும் அது வெற்றியளிக்கவில்லை.

இருப்பினும் அந்த மாணவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக இராசகுமாரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் கல்விச் செயற்பாடுகள் சாராத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகத்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை மறுத்துரைத்துள்ள யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், ‘பல்கலைக்கழகம் என்பது வெறும் புத்தகப் பூச்சிகளை உருவாக்கும் ஓரிடமல்ல, அது நாளைய தலைவர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்குகின்ற இடமாகும்’ என்று குறிப்பிடுகின்றார்.

‘சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதும், அவற்றை ஆய்வு செய்து அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் வழிகாட்டவும் வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இன்று நாட்டில் அமைச்சர்களாக இருப்பவர்கள் பலரும் இத்தகைய வழிநடத்தல் காரணமாகவே அரசியலில் இருக்கின்றார்கள்’ என்றார் இராசகுமாரன்.

‘எனினும், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அதேவேளை, அமைதியான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை வன்முறையின் மூலம் அடக்க முற்படுவதும் நல்லதல்ல’ என்றும் இராசகுமாரன் கூறியுள்ளார்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தோள்கொடுக்க புலம்பெயர் மண்ணில் இளையோர்களால் போராட்டங்கள் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.