10-04-2009 வெள்ளிக்கிழமை அன்று கடும் மழைக்கும் மத்தியிலும் சிறிலங்கா படையினர் இன்றும் தாக்குதல்: 292 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம் அடைந்த நாள் இன்று
2009 இனவாத அரசின் தமிழர் இன அழிப்பு தொடர்….!



10-04-2009 வெள்ளிக்கிழமை அன்று கடும் மழைக்கும் மத்தியிலும் சிறிலங்கா படையினர் இன்றும் தாக்குதல்: 292 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம் அடைந்த நாள் இன்று
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடுமையாக பெய்து வந்த மழைக்கு மத்தியில் சிறிலங்கா படையினர் அன்று அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் கடும் மழையினால் காப்பு எடுக்க முடியாத நிலையில் அல்லோகல்லோப்படும் மக்கள் மீது எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினார்கள்
கடும் மழையினால் பதுங்குகுழிகளுக்கு நீர் நிரம்பியதால் அவற்றுக்குள் காப்பு எடுக்க முடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிப்பட்டார்கள்
இந்நிலையிலேயே சிறிலங்கா படையினர் அவா்கள் மீது இரக்கமற்ற முறையில் எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.
பள்ளமான பகுதிகளுக்குள் நீர் நிரம்பியதால் மேட்டு நிலங்களை நோக்கிச் சென்ற மக்கள் மீதும் சிறிலங்கா படையினர் ஈவு இரக்கமற்ற முறையில் தொடர்த் தாக்குதல்களை நடத்தினார்கள்
இதேவேளையில் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகள் மீது தாக்குதல் நடத்திடும் இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனைப் பகுதி மழையினால் வெள்ளக்காடாக காட்சியளித்தது . இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
அதேவேளையில் கடும் மழைக்கும் மத்தியில் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் மாத்தளன் மருத்துவமனை பகுதியை நோக்கி பெரும் பல்குழல் தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சிறிலங்கா படையினர் தயாராகி
அப்பகுதியை நோக்கி பேருந்துகளில் பெருமளவிலான படையினர் கொண்டுவப்பட்ட
இதே நாள் வன்னியில் வேவ்வேறு இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் விபரங்கள் கிடைக்கவில்லை .
பதிவு – முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் நூலில் இருந்து.
படம்- த. வி.பு. ஊடகப் பிரிவு










