மரண அறிவித்தல் அமரர் வேலும்மயிலும் பாலசுப்பிரமணியம் (பாலப்பா) 
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாலசுப்பிரமணியம் (பாலப்பா) அவர்கள் 28/06/2021 திங்கட்கிழமை இன்று மதியம் 12.50 மணியளவில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற வேலும்மயிலும் தங்கனம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
நந்தகோபால், அருட்பெருநாதன்(சின்னான்) , காலஞ்சென்ற ஆதிஅருணாசலம் (ஆதி), காலஞ்சென்ற சிதம்பரநடராஜா (குட்டித்துறை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணசாமி மற்றும் மனோகரம்மா ஆகியோரின் சகோதரரும்,
யாழினி மற்றும் நிதுஷனின் பாசமிகு மாமனாரும்,
இந்திராதேவி, புவனேஸ்வரி, கதிர்காமலிங்கம் காலஞ்சென்ற செல்வரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும்,
மதியழகன், சிவசூரியன், கவிதா, இந்திரஜோதி, ஏழுமலை, பாலேந்திரா, சித்திரா ஆகியோரின் பெரிய தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.










