வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2015
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9.30 மணிக்கு கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழவிற்கு பருத்தித்துறை பரதேச செயலக கணக்காளா் திரு.செ.கிருபாகரன் அவர்களும், சிற்ப்பு விருந்தினராக வல்வெட்டித்துறை வடகிழக்கு கிராம சேவகர் திரு.S.தவனேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்விற்கு வல்வெட்டித்துறை வடகிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சு.கலைவாணி அவர்களும், வல்வெட்டித்துறை பிரதேசப் பாடசாலை அதிபர்களும், கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும், பெற்றோர்களும் பாலர்களும் கலந்து சிறப்பித்தனர்.




















































































