விசாகப்பெருமாள் குணநாதனுக்கு புலம்பெயர் வல்வையர்களின்
கண்ணீர் அஞ்சலியும் வணக்கமும்

வீரம் விளைந்த வல்வை மண்ணில் போராட்ட காலத்திற்க்கு முன்னர் ஒழுங்கைக்கு ஒழுங்கை விளையாட்டு விழாக்களை வல்வையரின் இந்திர விழாப்போல் கொண்டாடியது ஒரு காலம். அப்போது பார்வையாளர்களுக்கு என்று விசேட போட்டிகள் நடைபெறும். அதில் மரதன் ஓட்டமும் ஒருமைல் ஒட்டமும் சிறப்பான நிகழ்வாக இருக்கும். எங்கள் குணநாதன் வல்வை மண்ணில் ஒரு மைல் ஓட்டத்தில் ஒரு காலத்தின் ஆளுமையாக விளையாட்டு வீரர் ஆக இளவயதில் தன்னை தடம்பதித்துக் கொண்டவர். அதன் தொடர்ச்சியாகத்தான் வல்வை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட வீரர்ராக மட்டைப்பந்தாட்டம் கைப்பந்தாட்டம் பூப்பந்தாட்டம் என்று சகல விளையாட்டுக்களிலும் தன்னை சங்கமித்துக்கொண்டவர்.
வல்வை மக்கள் பண்பாண குணங்கள் என்று கருதித்தியலுக்கு இசைவாக வாழ்ந்து வாழ்வெய்திய குணாளன்.
எங்கள் குணநாதன் மரதன் ஓட்டவீரணாக தடம் பதிக்கும் முன்னர் வல்வையில் வல்வெட்டியை பிறப்பிடமாக துரைரஜா பின்னர் மதுரவீரன் கோவிலடி கனகசபை பாலசிங்ம் தொடர்ச்சியாக குச்சம் இரட்ணசபாபதி சிவஞாணம் குச்சம் சுப்பிரமணியம் சற்குணசிகாமணி அடுத்து திருப்பதி இரவீந்திரன் மற்றும் பசுபதி சுகுகுமாரசாமி அத்துடன் அருளம்பலம் அருள்பகவான் என்று என் ஞாபகத்தில் உள்ள வீரர்களை குணநாதனின் வீரர் வணக்க வரலாற்று பதிவில் நிறைவு கொள்கிறது.
வல்வையில் உதயசூரியன் விளையாட்க்கழகம் நடாத்தும் இரு நாட்க்கள் கொண்ட பெருவிழாவில் 25 மைல் மரதன் ஓட்டப்போட்டிக்கு மலையகம் கற்றனில் இருந்தும் அதிபர் செல்வச்சிவம் யோகச்சந்திரனால் இரண்டு வீரர்கள் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு வல்வையின் சீதோட்சனம் ஒத்துவராமல் முடிவுக்கு ஒரு மைல் மட்டும் இருக்க இடைநிறுத்திக்கொண்ட காலப்பதிவுகள் வல்வையில் உண்டு.
போர்ச்சூழலிலும் ஓடிப்ப்போனவர்கள் என்று வரலாற்று பதிவை தவிர்த்து வல்வையில் வல்வை வாசத்துடன் வல்வை மண்ணில் இறுதி மூச்சுவரை வல்வையரின் வரலாற்று மரபை பேணிக்காத்த குணநாதா உனக்கு புலம்பெயர் வல்வையர்களின் கண்ணீர் அஞ்சலியும் வீரர் வணக்கங்களையும் சமர்ப்பணம் செய்கின்றோம்.
உலக வல்வையர்கள் சார்பாக
வல்வை மாமாச்சி இங்கிலாந்து.
சோ.செ.தெய்வச்சந்திரன்
06.11.2015