யாழ் போதனா வைத்தியசாலையினால் பொதுமக்களிடையே கண்டறியப்படாமல் இருக்கும் நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம், அததிகரித்த உடற்பருமன், அதிகரித்த கொலஸ்ரோல் போன்ற சுகாதாரப் பிரச்சினைகளை கண்டறிவதற்கு வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஊடாக இலவச மருத்துவ முகாம் 07.01.2016 (வியாழன்) காலை 9.00 மணிக்கு கணபதி பாலர் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
எனவே மேற்படி மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக முன்பே பெயர்களை கணபதி படிப்பகத்தில் பதிவு செய்தவர்களும், மேலும் மருத்துவமுகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்களும் குறித்ததினத்தில் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு – மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்கள் 12 மணித்தியாலங்கள் வெறும் வயிற்றுடன் (06.01.2016 புதன் இரவு 7.00 மணிதொடக்கம் ஆகாரம், தேனீர் அருந்தாமல் தேவை ஏற்படின் நீர் அருந்தலாம் ) வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு – பூ.அகமணிதேவர் (தலைவர், கணபதி படிப்பகம்) தொலைபேசி இல – 0771028837