வல்வை சிவன் கோவிலில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாதிரை உற்சவத்தின் போது நடராஜப் பெருமான் வீதி உலாவும், நடராஜர் திருக்கூத்தும் இடம்பெற்றது.
இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒருசில சிவன் கோவில்களில் மட்டுமே. அத்தகைய நடராஜர் திருக்கூத்து நடைபெறும் கோவில்களில், வல்வெட்டித்துறை சிவன் கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
விசேடமாக அமைக்கப்பட்ட பொறிமுறையுடன் கூடிய சகடையில் (manually operated car), நடராஜப்பெருமான் வீதி உலாவும் திருக்கூத்தும் சிறப்பாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.