வல்வை செய்திகள்

கணபதி பாலர் பாடசாலையில் இன்று கால்கோள் விழா நடைபெற்றது

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் புதுமுக பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (04.02.2016) நடைபெற்றது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திரு.ஞானசேகரம் ரவிக்குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பாலர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் புதுமுக பாலர்கள் பூமாலைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு கணபதி பாலர் பூங்காவில் நிகழ்வுகள் நடைபெற்றன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *