யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மூவர் 16.03.2017 காலை-08 மணியளவில் தீர்வு கிடைக்கும் வரையான தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள் தொடர்பாக அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களைக் கைகளில் தாங்கியிருந்தனர்.
குறித்த போராட்டம் 6 தொடருகின்றது
தமக்குரிய பொருத்தமான தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.