வல்வை கணபதி படிப்பக பொன்விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது 09.12.2017
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா 09.12.2017 (சனிக்கிழழை) மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மேற்படி நிகழ்விற்குபிரதம விருந்தினராக கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவர் திரு.தி.நாகேஸ்வரன் ஜயா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கடந்த 49 ஆண்டுகளாக படிப்பகத்தினை சிறந்தமுறையில் நிர்வகித்துவந்த செயற்குழுக்களில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவி வகித்தோரில் தற்பொழுது உள்ளூரில் வசிக்கும் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலைப் பாலர்களின் கலை நிகழ்வுகளும், நெடியகாடு இளைஞர் காலாமன்றத்தினர் வழங்கும் ‘ஒருமாத வீசா’ என்னும் மேடை நாடகமும் இடம்பெற்றுள்ளது, பொன்விழாவினை மேலும் சிறப்பிக்கும் வகையில் ‘கணநாதம்’ பொன்விழாச் சிறப்பு மலருடன் கணபதி படிப்பகத்தின் வரலாற்றினை எடுத்துக்கூறும் ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.









