வல்வை நகர சபை தலைவர் நாளை தெரிவு

வல்வை நகர சபை தலைவர் நாளை தெரிவு

வல்வை நகர சபை தலைவர் தெரிவு நாளை உள்ளூராட்சி ஆணையாளர் முன்னிலையில் நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.எந்த கட்சியும் தனி பெருபைன்மை இல்லாமையினால் இந்த குழப்பம் அரங்கேரியது.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சுயேச்சைக் குழுவுக்கும் இடையிலான பல சுற்றுப்பேச்சுகளும் பல விட்டுக்கொடுப்புக்களும் கூட்டமைப்னால் வழங்கப்பட்ட போதும் ஏற்பு இல்லைமையினால் பேச்சுகள் முறிவடைந்துள்ளமையினால் உள்ளூராட்சி ஆணையாளர் முன்னிலையில் வல்வை நகர சபை தலைவர் தெரிவு இடம்பெறவேண்டியுள்ளது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொகு
10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1,322 31.70% 7
சுயேச்சைக் குழு 1069 25.64% 4
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 659 15.80% 2
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 619 14.84% 2
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 230 5.52% 1
தமிழர் விடுதலைக் கூட்டணி 187 4.48% 1
ஐக்கிய தேசியக் கட்சி 84 2.01% 0
செல்லுபடியான வாக்குகள் 4,170 100.00% 19
செல்லாத வாக்குகள் 42
பதிவான மொத்த வாக்குகள் 4,212
பதிவில் உள்ள வாக்காளர்கள் 6,055
வாக்களித்தோர் 69.56%
வல்வெட்டித்துறை நகரசபை (Valvettithurai Urban Council, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்

Leave a Reply

Your email address will not be published.