வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரப்பெருமான் கோயிலில் இடம்பெறும் அர்த்த சாமப்பூஜை
இவ்வாலயத்தில் தினந்தோறும் இடம்பெறும் இரண்டாம் காலப்பூஜை நிறைவடைந்ததும் மூலவர், அம்பாள் ஆகிய இருவருக்கும் நடைபெறும் அபிஷேகத்தை தொடர்ந்து சங்குகள் முழங்க பூஜை இடம்பெறும் இதனைத்தொடர்ந்து அதிகாலையில் பள்ளியறையிலிருந்து மூலஸ்தானத்திற்கு
எழுந்தருளிய சுவாமி (சிவன்) அடியவர்கள் திருமுறைகள் இசைக்க பல்லக்கில் எழுந்ததருளி பள்ளியறை அடைந்து அங்கு ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் அம்பாளுக்கு மாலை சாத்தி பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து பள்ளியறை திருக்கதவு பூட்டப்படும்.இதனைத்தொடர்ந்து சங்குகள் முழங்க வைரவப்பெருமானுக்கான பூஜை இடம்பெற்ற பின்னர் ஆலயத்தின் திருக்கதவு பூட்டப்படும்.
வருடாந்தம் பங்குனி மாதத்தில் இடம்பபெறும் மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தோற்சவம்,அம்பாள் உற்சவம் ,சண்டேஸ்வரர் உற்சவம் என்பவற்றை தொடர்ந்து வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் வைரவப்பெருமானுக்கான அர்த்தசாமப்பூஜை விசேடமாக இடம்பெறும்.
அன்றைய தினம் அபிஷேகத்தை தொடர்ந்து நாதஸ்வரம், மேளம், சங்குகள் முழங்க விஷேட பூஜை இடம் பெற்றதைத்தொடர்ந்து அடியார்களுக்கு விபூதிப்பிரசாதம் வழங்கப்படுதோடு வைரவப்பெருமானுக்கு நிவேதிக்கப்பட்ட பிரசாதம், பலாகாரம் என்பனவும் வழங்கப்படும்.
ஆக்கம் வல்வையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான. திரு.பலசுப்பிரமணியம் மீனாட்சிசுந்தரம்
வல்வை மக்களாகி நீங்கள் இவ் அர்த்த சாமப்பூஜையை கண்டிப்பாக உங்கள் சிறார்களுக்கு காண்பித்து வழிபட்டு பெருமானின் அரிய பூஜையின் அருளை பெற்றுக்கொள்ளவும் வேண்டுகின்றோம்.










