தாயக செய்திகள்

வசந்தனின் தொடர்பிழந்த அந்தநாள்.

வசந்தனின் தொடர்பிழந்த அந்தநாள்.
***********************************
இறுதியாக புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருந்த அந்த இடத்திற்கு முன்னால் உள்ள சந்தியின் மூலையில் உள்ள வீட்டிலேதான் அந்த வெடிச்சத்தம் கேட்டது.அன்று காலையில்தான் காயத்திற்கு மருந்து கட்டிவிட்டு நானும்,பாஸ்கரனும்
குட்டியண்ணையின் பங்கரடிக்கு சென்றிருந்தோம்.அதுவும் அந்தச் சந்தியில்தான் இருந்தது.வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து இடைவிடாது வெடியோசைகள் வந்துகொண்டிருந்தது.

வசந்தனின் ஆமறியாத்தான் இருக்கவேணுமென்று எங்களுக்குள் கூறிக்கொண்டு வசந்தனை வோக்கியில் தொடர்புகொள்ள முற்பட்டோம்.தொடர்பு கிடைக்கவில்லை.
எனக்கு நடக்கமுடியாத காயமென்பதால் பாஸ்கரன்தான் தானே போய் பார்த்துவிட்டுவருகிறேன் என குட்டியண்ணையையும் கூட்டிக்கொண்டு சென்றான்.ஆனால் அவனாலும் வீட்டுக்குள்ளே போகமுடியவில்லை.உள்ளுக்குள் இருந்த ரவைகளில் தீப்பிடித்து அவைகள் வெடித்து அங்குமிங்கும் சீறிக்கொண்டிருந்தன.

ஓரளவிற்கு வெடியதிர்வுகள் அடங்கினாப்பிறகுதான் கிட்டபோய் பார்த்தோம் வீடு முழுவதுமே எரிந்து சாம்பலாகியிருந்தது.
அதற்குள் எங்கள் வசந்தனும்.

நினைவுகளுடன்..

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *