உலகளாவிய கராத்தே தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார் எம்மண்ணின் வல்வை விளையாட்டுக்கழக மைந்தன் கருணாகரன் அகிலன்.
உலகளாவிய கராத்தே தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார் எம்மண்ணின் வல்வை விளையாட்டுக்கழக மைந்தன் கருணாகரன் அகிலன்.
வல்வையின் முன்னாள் நட்சசத்திர உதைபந்தாட்ட வீரர் அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்களின் பேரனும்.கவிதா, கருணாகரன் ஆகியோரின் புதல்வனுமான அகிலன் கருணாகரன் 7 வது WUKS world championship இல் 11 வயது கராத்தே பிரிவில் பங்கு பற்றி வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார் .இதில் 41 நாடுகள் கலந்து கொண்டதுடன் 2100 கராத்தே வீரர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிலன் அவர்களின் திறமை மென்மேலும் வளரவும் அவர் எம்மண்ணிற்கு மென்மேலும் பெருமைசேர்க்கவும் வல்வை மக்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றோம்.அத்துடன் அகிலன் அவர்களின் சகோதரியான ஆர்த்தி கருணாகரனும் சிறந்த கராத்தே வீராங்கனையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












