வல்வை செய்திகள்

வல்வெட்த்துறை நகராட்சி மன்றத்தில் தியாக தீபம் லெப்கோணல் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு தின அனுஷ்டிப்போடு ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரேரனை ஏக மனதோடு நிறைவேற்றப்பட்டுள்ளது

வல்வெட்த்துறை நகராட்சி மன்றத்தில்
தியாக தீபம் லெப்கோணல் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு தினமும் அகவணக்க தீபச்சுடரேற்றல் மலர் அஞ்சலி செலுத்திய பிற்பாடு கூட்டம் ஆரம்பமாகி பிரேரனை தீர்மானம் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையைக் கோருதலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தலும். என்னும் பிரேரனை அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் அவர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரனைக்கு வலுச்சேர்க்முகமாக வல்வெட்த்துறை நகரசபையில் இன்று பிரேரிக்கப்பட்டு ஏக மனதோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மூலப்பிரதியானது ஐக்கிய நாடுக்கள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பிரதி ஊள்ளூராட்ச்சி ஆணையாளர் அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *