வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்
பொது அறிவித்தல்
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று எமது பிரதேசத்தில் நடைபெறவுள்ள பட்டப்போட்டி நிகழ்வுகளை கண்டுகளிக்க பெருமளவான மக்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமையினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு நகராட்சி மன்றத்தினால் கீழ்க்குறிப்பிட்டவாறு மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன சகல பொது மக்களும் சாரதிகளும் வீதியை பயன்படுத்துபவர்களும் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டு;கொள்கின்றேன்.
• 15.01.2019 பி.ப 2:00 மணி தொடக்கம் இரவு 11:00 மணிவரை வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து ஆலடிச்சந்தி வரையான பருத்தித்துறை பொன்னாலை வீதி (காங்கேசன்துறை வீதி) சகல வாகனப்போக்குவரத்திற்கும் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.
• வல்வெட்டித்துறை சந்தியினூடாகச்செல்லும் பிரதான வீதிகளில் வல்வை மகளிர் தொடக்கம் வல்வெட்டித்துறை சந்திவரையான பகுதியும், சிதம்பரா கல்லூரி தொடக்கம் ஆலடிசந்தி வரையான பகுதியும் தூபிச்சந்தியிலிருந்து இலங்கைவங்கி வரையான யாழ் வீதியும் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு சில்லு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் எதுவும் இப்பகுதிக்குள் அனுமதிக்கப்படாது.
• மேற்குறித்த பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தமது வாகனங்களை உட்கொண்டு வருதல் மற்றும் வெளிக்கொண்டு செல்லுதலுக்கான ஏற்பாடுகளை பி.ப 2:00 மணிக்கு முன்னதாக ஒழுங்குபடுத்திக்கொள்ளவும்
• வல்வெட்டித்துறை ஊடாக போக்குவரத்துசெய்யும் சகல வாகன சாரதிகளும் பொது மக்களும் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி சிரமங்களை தவிர்த்துக்கொள்ளவும்.
• பட்டப்போட்டி நிகழ்வுகளுக்கு வருகைதருபவர்கள் தமது வாகனங்களை உரிய வாகனத்தரிப்பிடங்களில் நிறுத்தவும்
• வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. அனுமதிக்கபடாத இடங்களில் நிறுத்தப்படும் வகனங்கள் பொலிசாரால் பொலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
• வல்வெட்டித்துறை சந்தி தொடக்கம் நகராட்சி மன்றம் வரையான பிரதான வீதியோரங்களில் எந்தவொரு வியாபார நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்படமாட்டாது
கோ.கருணானந்தராசா
தவிசாளர்,
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்
14.01.2019









