வல்வை செய்திகள்

லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் உதைபந்தாட்ட தொடர் தீருவில் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது

முதல் வெற்றியினை பதிவு செய்தது கொலின்ஸ் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது அண்ணாசிலையடி அணி

லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் உதைபந்தாட்ட தொடர் தீருவில் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் நேற்றைய முதலாவது போட்டியான கரணவாய் கொலின்ஸ் மற்றும் வதிரி பொம்மேர்ஸ் அணிகளிடையான போட்டியில் கொலின்ஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்றைய இரண்டாவது போட்டியில் அண்ணாசிலையடி மற்றும் வல்வை அணிகள் மோதின இப்போட்டியின் இறுதி நேரத்தில் அண்ணாசிலையடி அணி 3:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றின் இரண்டாவது வெற்றியினை பெற்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *