இரத்ததான முகாம் வழமையாக இரத்ததானம் செய்யும் குருதிக் கொடையாளர்களும் புதிதாக இரத்ததானம் செய்யவுள்ள குருதிக் கொடையாளர்களும் அங்கு சமூகம் கொடுத்து இரத்ததானம் செய்து இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.
இரத்ததான முகாம்
சமாதான நீதவானும் சிறந்த சமூக சேவையாளருமான அமரர் பூபாலகிருஸ்ணசாமி அகமணிதேவர் அவர்களின் ஞாபகார்த்தமாக மாபெரும் இரத்ததான முகாம் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை (24.11.2019) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் சிகிச்சை நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வழமையாக இரத்ததானம் செய்யும் குருதிக் கொடையாளர்களும் புதிதாக இரத்ததானம் செய்யவுள்ள குருதிக் கொடையாளர்களும் அங்கு சமூகம் கொடுத்து இரத்ததானம் செய்து இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.










