வல்வை செய்திகள்

வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் 7:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 05.03.2020

வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில்
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் 7:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 05.03.2020

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில்.முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.

வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின்
இன்றைய ஆட்டத்தில் மாலை 4.00 மணி
பருத்தித்துறை ஐக்கியம் எதிர் திக்கம் விளையாட்டுக் கழகம் மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் 7:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

ஆட்ட நாயகனாக திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக பிரசாந் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *