வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது இரணைமாதாநகர் சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் சாவற்காடு மகாத்மா விளையாட்டுக்கழகம்
வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது இரணைமாதாநகர் சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் சாவற்காடு மகாத்மா விளையாட்டுக்கழகம்
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் (09/03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் புங்குடுதீவு இறுப்பிட்டி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து இரணைமாதாநகர் சென்மேரிஸ் அணியானது மோதியது.
விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத இவ்வாட்டத்தில் இரணைமாதாநகர் சென்மேரிஸ் அணியானது 02:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.
ஆட்டநாயகனாக இரணைமாதாநகர் சென்மேரிஸ் அணியைச்சேர்ந்த கிரிஎடிசன் தெரிவுசெய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் சாவற்காடு மகாத்மா அணியினை எதிர்த்து மணற்காடு சென்அன்ரனிஸ் அணியானது மோதியது.
பரப்பான ஆட்டத்தில் 01:00 என்ற கோல்கணக்கில் சாவற்காடு மகாத்மா அணியானது வெற்றி பெற்று அடுத்தசுற்றுக்குள் நுழைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக சாவற்காடு மகாத்மா அணியின் மயூரன் தெரிவுசெய்யப்பட்டார்.






































































