வைத்தியப்பா ஞாபகார்த்த உதை ரேவடி அணி சம்பியனானது இரண்டாம் இடத்தை உதயசூரியன் அணி தட்டி சென்றது.
மறைந்த சைனிங்ஸ் மூத்த உறுப்பினர் வைத்தியப்பா ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தினர் மற்றும் First fresh food LTD (London) அனுசரனையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின்
3ம் இடத்தெரிவு ஆட்டம், இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.
இறுதி ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5. 2 என்ற கோல் கணக்கில் ரேவடி அணி வெற்றி பெற்று வைத்தியப்பா ஞாபகார்த்த சைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடரின் சம்பியனானது . இரண்டாம் இடத்தை உதயசூரியன் அணி தட்டி சென்றது. மூன்றாமிடத்தை இளங்கதீர் அணி தட்டிச் சென்றது.
*இறுதிப்போட்டி ஆட்டநாயகன் சஞ்சீவன் – ரேவடி அணி
*தொடரின் சிறந்த வீரன் சுலக்சன் – உதயசூரியன் அணி
*சிறந்த கோல்காப்பாளர் விஜி – இளங்கதிர் அணி
*வளர்ந்துவரும் வீரன் ஆதி – வல்வை ஒற்றுமை அணி























