வல்வை செய்திகள்

வல்வை 73 குடும்ப உதை-இளங்கதிர் அணி சம்பியனாகியது இரண்டாம் இடத்தைப் வல்வை ஒற்றுமை அணி பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தைப் பெற்றது வல்வை ஒற்றுமை அணி

மறைந்த தோழர்கள், தோழியர்களின் ஞாபகார்த்தமாக உலகளாவிய வல்வை 73 குடும்பத்தினரின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டமானது இன்றைய தினம் 13/08/2023 றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இவ் இறுதியாட்டத்தில் இளங்கதிர் அணியினை எதிர்த்து வல்வை ஒற்றுமை அணியானது மோதியது.

இறுதியாட்டமானது மிகுந்த பரபரப்பாக நடைபெற கிடைக்கப்பெறும் கோல் வாய்ப்புக்களையும் தவற விட இறுதிநேரத்தில் இளங்கதிர் அணியின் தனுஷன் அணிக்காக 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது இளங்கதிர் அணி

இப்போட்டிகளின்
ஆட்டநாயகன் -கேசவன் (வல்வை ஒற்றுமை)
சிறந்த கோல்காப்பாளர்-ஜேம்ஸ்ரன் (வல்வை ஒற்றுமை)
தொடராட்டநாயகன்− கபில்ராஜ் (இளங்கதிர்)

இறுதியாட்டத்தில் வெற்றி பெற்று சம்பியனாகிய இளங்கதிர் அணி .