செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.கே சிவாஜிலிங்கம் அவர்களால் அனுஷ்டிப்பு


















வல்வெட்டித்துறையில் உள்ள அவரின் அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு தினத்தில் நினைவு கூறுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின் 17 வது ஆண்டு நினைவு நாள் – 14.08.2023
400 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீச நாட்டவரிடம் இழந்த இறைமையை
(SOVEREIGNTY) மீட்கவும், தமிழ் இனப் படுகொலையின் (TAMIL GENOCIDE
குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நீதியை நிலை
நாட்டவும், ஈடுசெய் நீதியை (REMEDIAL JUSTICE) பெற்றுக் கொள்ளவும்.
தமிழினப் படுகொலை மீள நிகழாது இருப்பதற்கும் (NON – RECURRENCE) ஐப்
பெறவும், ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்
(SELF – DETERMINATION) பாவித்து சுதந்திரத்திற்கான பொதுசன
வாக்கெடுப்பை (INDEPENDENCE REFERENDUM) ஒன்றை இலங்கையின் வடக்கு- கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மக்களும், புலம் பெயர்ந்தவர்களும் வாக்களிக்கக் கூடிய
விதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடாத்த முன்வர வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை (INTERNATIONAL COMMUNITY) கோருகின்றோம்.
தமிழர்களின் தாகம்!
தமிழ் ஈழத் தாயகம்!!









