வல்வை செய்திகள்

வல்வை ஒற்றுமை விளையாட்டு கழகம் நடாத்தும் மறைந்த ஒற்றுமை வீரர்கள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர்தீருவில் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

வல்வை ஒற்றுமை விளையாட்டு கழகம் நடாத்தும் மறைந்த ஒற்றுமை வீரர்கள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர்
தீருவில் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இளங்கதிர் அணியை எதிர்த்து ரேவடி அணி மோதியிருந்தது.

இவ்வாட்டத்தில் 4:1என்ற கோல் கணக்கில் இளங்கதிர் அணி
வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது!

கோல் அடித்தார்!
இளங்கதிர்
ஜெகதாஸ் (குட்டி மணி)02
தனுஷன் 01
கபிலன். 01

       ரேவடி 
       அபிஷாந் 01

போட்டியின் ஆட்டநாயகனாக இளங்கதிர் அணியை சேர்ந்த ஜெகதாஸ்
(குட்டி மணி)அவர்கள்
தெரிவு செய்யப்பட்டார்!

மேலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் சைனீங்ஸ் விளையாட்டு கழகம், தீருவில் விளையாட்டு கழகம் றேயின்போ விளையாட்டு கழகம், இளங்கதிர் விளையாட்டு கழகம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது.