வல்வையில் இன்று மின்னொளியில் ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டிகள் 24.09.2013
வல்வை பொது விளையாட்டு அரங்கில் கரப்பந்தாட்டப் போட்டிகளானது இன்று மாலை 7.00 மின்னொளியில் ஆரம்பமாகின. நேற்றய போட்டிகளின் முடிவில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம்,வல்வை ரேவடி விளையாட்டுக் கழகம், வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழக Aஅணி மற்றும் வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழக Bஅணி என்பன அடுத்தகட்ட அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தன. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் நேதாஜி விளையாட்டுக் கழகம் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்திற்கான கேடயங்களை தனதாக்கிக் கொண்டது












